உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சர்வதேச ஸ்பீடு போஸ்ட், பார்சல் சேவை மீண்டும் தொடக்கம்: அஞ்சல் துறை தகவல்

சர்வதேச ஸ்பீடு போஸ்ட், பார்சல் சேவை மீண்டும் தொடக்கம்: அஞ்சல் துறை தகவல்

கரூர், சர்வதேச ஸ்பீடு போஸ்ட் மற்றும் பார்சல் சேவை, அஞ்சல் அலுவலகங்களில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கரூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தமிழினி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:சர்வதேச அஞ்சல் சேவை, அனைத்து அஞ்சல் அலுவலகங்களில் செயல்படுகின்றன. இந்நிலையில் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு சர்வதேச அஞ்சல் சேவைகளான ஸ்பீடு போஸ்ட் மற்றும் பார்சல் சேவைகள் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.தற்போது மக்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சர்வதேச அஞ்சல் சேவைகள் அனைத்து அஞ்சல் அலுவலகங்களில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் அனுப்பப்படும் பொருட்கள் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் இறக்குமதி விதிமுறைகளுக்குட்பட்டு இருக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களை, தொடர்பு கொள்ளலாம். அல்லது www.indiapost.gov.inஎன்ற இணையதள முகவரியை பார்வையிடலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை