மேலும் செய்திகள்
சட்டசபை தேர்தல் பணிகள் தி.மு.க., குழு ஆலோசனை
04-Oct-2024
கரூர்: ''வரும், 2026 சட்டசபை தேர்தலில் துணை முதல்வர் உதயநிதி, முதல்வர் வேட்பாளரா என்பதை கட்சிதான் முடிவு செய்யும்,'' என, பெரம்பலுார் தி.மு.க., எம்.பி., அருண் நேரு தெரிவித்தார்.கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, மாவட்ட வளர்ச்சி, ஒருங்-கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த, எம்.பி., அருண் நேரு நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க.,வில் மூத்த நிர்வாகிகளும், இளைஞர்களும் இணைந்து செயல்படுவது வழக்கமாக உள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் எனக்கு சீட் கிடைக்குமா என, வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசியதை, பெருந்தன்மையாக எடுத்து கொள்ள வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் துணை முதல்வர் உதயநிதி, முதல்வர் வேட்பாளரா இருப்பாரா என்ற கேள்விக்கு, புதிதாக வந்த எனக்கு பதில் சொல்ல தகுதி இல்லை. உதயநிதி முதல்வர் வேட்பாளரா என்பதை கட்சியும், தமிழக மக்களும், எம்.எல்.ஏ.,க்களும் முடிவு செய்வர். இவ்வாறு கூறினார்.
04-Oct-2024