உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆர்.டி., மலையில் ஜல்லிக்கட்டு போட்டி மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கல்

ஆர்.டி., மலையில் ஜல்லிக்கட்டு போட்டி மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கல்

குளித்தலை: குளித்தலை அருகே, ஆர்.டி., மலையில், வரும், 16ல் ஜல்லிக்கட்டு போட்டி நடை-பெற உள்ளது. இதில் பங்கேற்கும் காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த ஆர்.டி., மலை கோவில் முன், வரும், 16ல் விழாக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில், 63ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது. இதையொட்டி, விழாவில் பங்கேற்கும் காளை மற்றும் மாடு-பிடி வீரர்களுக்கு, விழாக்குழு தலைவர் சங்க கவுண்டர் தலை-மையில், நேற்று காலை டோக்கன் வழங்கப்பட்டது.இதில், திருச்சி, கரூர், திண்டுக்கல், தஞ்சை, பெரம்பலுார், புதுக்-கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 700 காளைகள், 400 மாடுபிடி வீரர்களுக்கு இலவசமாக டோக்கன் வழங்கப்பட்-டது. இந்த டோக்கனை பெறுவதற்காக, மாடுபிடி வீரர்கள் அதி-காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தோகைமலை போலீசாரின் பாதுகாப்புடன் டோக்கன் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி