மேலும் செய்திகள்
ஜமாபந்தியில் 406 மனுக்கள் ஏற்பு
28-May-2025
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் கடந்த, 22ம் தேதி முதல் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில், 308 மனுக்கள் பெறப்பட்டு, 25 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.அரவக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 22ம் தேதி முதல் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. 22, 23ம் தேதி சின்னதாராபுரம் குறுவட்டத்திற்கும், 26, 27ம் தேதி அரவக்குறிச்சி குறுவட்டத்திற்கும், 29, 30ம் தேதி பள்ளப்பட்டி குறுவட்டத்திற்கும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 308 மனுக்கள் பெறப்பட்டு, 25 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பகிரப்பட்டு, 15 நாட்களுக்குள் தீர்வு காண ஆர்.டி.ஓ., முகமது பைசூல் அறிவுறுத்தினார்.ஜமாபந்தி நிகழ்வில் அரவக்குறிச்சி தாசில்தார் மகேந்திரன், தனி தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) அமுதா, தலைமை சர்வேயர் பச்சைமுத்து, வட்ட வழங்கல் அலுவலர் கேசவன், தேர்தல் துணை தாசில்தார் சுதா, மண்டல துணை தாசில்தார் உமா, பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர் மனோகரன் மற்றும் பிற துறை அதிகாரிகள், அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
28-May-2025