மேலும் செய்திகள்
பொது - பெயர் மாற்ற லஞ்சம் 'பில்' கலெக்டர் கைது
27-Jun-2025
லஞ்ச ஒழிப்பு துறையின் அலட்சியம்!
12-Jul-2025 | 1
குளித்தலை, கரூர் மாவட்டம், கடவூர் அருகே பிறப்பு சான்றிதழில், பெயர் மாற்றம் செய்வதற்காக, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம், திங்களூரை சேர்ந்த வேல்முருகன் மனைவி ரேவதி, விவசாய கூலித் தொழிலாளி. இவரது சொந்த ஊர் கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த கடவூர் தாலுகா, மேலப்பகுதி பஞ்சாயத்தில் உள்ள வீரணம்பட்டியாகும். இவரது மகள் பவித்ரா, ஈரோட்டில் உள்ள கல்லுாரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.பவித்ராவின் பிறப்பு சான்றிதழில், பவித்ரா என்பதற்கு பதிலாக பௌத்ரா என்று இருந்துள்ளது. பள்ளி சான்று, ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளில் பவித்ரா என்று இருந்துள்ளது. ஆனால், பிறப்பு சான்றிதழில் மட்டும் பௌத்ரா என்று இருந்ததால், பிற்காலத்தில் பிரச்னை வரும் என நினைத்த ரேவதி, கடவூர் தாசில்தார் அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்வதற்காக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முயற்சி செய்து வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று கடவூர் தாசில்தார் சவுந்தரவல்லியை,சந்தித்த ரேவதி, தனது மகளின் பிறப்பு சான்றிதழில் பெயரில் உள்ள பிழையை மாற்றம் செய்து தர வேண்டும் என்று விண்ணப்பம் அளித்துள்ளார். இதை பெற்றுக் கொண்ட தாசில்தார் சவுந்தரவல்லி, பெயர் மாற்றம் செய்வதற்கு, 5,000 ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ரேவதி, கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின்படி, நேற்று மதியம், 2:00 மணியளவில் தாசில்தார் சவுந்தரவல்லியை சந்தித்த ரேவதி அவரிடம், 5,000 ரூபாயை லஞ்சமாக வழங்கினார். அப்போது மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., அம்புரோஸ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சாமிநாதன், தங்கமணி மற்றும் போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
27-Jun-2025
12-Jul-2025 | 1