உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா

சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா

தர்மபுரி, நவ. 3-தர்மபுரி டவுன், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், 60 வது ஆண்டு கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா நேற்று காலை தொடங்கியது. மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடந்தது. பின்னர், கோவில் பிரதான மண்டபத்தில் சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. யாக சாலையில் இருந்து புனித நீர் கொண்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதையடுத்து, சுவாமிக்கு கந்த சஷ்டி லட்சார்ச்சனை தொடங்கியது. இதேபோன்று நவ., 7- அன்று முதல் தினமும், 4 காலங்களில் சிறப்பு லட்சார்ச்சனை மற்றும் அபிஷேக ஆராதனை, திருமுறை பாராயணம் நடக்கவுள்ளது.* தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா லட்சார்ச்சனை நேற்று துவங்கியது. நேற்று காலை சுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் கவச அலங்காரம் நடந்தது. வரும், 7ல், சஷ்டி தியான மண்டபத்தில், 36 முறை தொடர் சஷ்டி பாராயணமும் நடக்கிறது. அன்று மாலை சிவன் கோவிலில் தாயார் சக்தியிடம் வேல் வாங்குதலும், தொடர்ந்து இரவு வாணவேடிக்கையுடன் சுவாமி வீதி உலா வந்து, சூரசம்ஹாரம் நடக்கிறது. வெள்ளிக்கிழமை காலை சுப்பிரமணிய சுவாமிக்கு மஹா அபிஷேகமும், மாலையில் தெய்வானை திருக்கல்யாணமும் நடக்கிறது. தொடர்ந்து இரவு திருமண கோலத்துடன் புஷ்ப பல்லக்கில் ஊர்வலம் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை