சுங்க கட்டணம் இல்லாமல் தரைக்கடை கரூர் மாநகராட்சி கமிஷனர் தகவல்
கரூர், சுங்கம் கட்டணம் இல்லாமல், தீபாவளி தரைக்கடை அமைத்து கொள்ளலாம் என, கரூர் மாநகராட்சி கமிஷனர் சுதா தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரூர் மாநகராட்சி பகுதியில், தீபாவளியை முன்னிட்டு ஜவகர் பஜார் தவிர பிற பகுதிகளில் போக்குவரத்து இடையூறு இல்லாமல், தரைக்கடைகள் அமைத்து கொள்ளலாம்.சுங்க கட்டணம் இல்லாம் தரைக்கடைகள் அமைக்கலாம் என, நேற்று நடந்த கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, தீயணைப்பு துறை உள்பட பிற துறைகளில் அனுமதி பெற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.