கரூர் சம்பவம்: பலியானவர்கள் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு
கரூர்: கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. 16 பெண்கள், 10 குழந்தைகள் உட்பட 13 ஆண்கள் பலியாகினர்.கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களில் 90பேர் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இறந்த 39 பேர்களில் 35 பேர்களின் உடல் அடையாளம் காணப்பட்டது. இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல கரூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.இந்நிலையில் கரூர் அரசு மருத்துவமனைக்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற தமிழக முதல்வர் ஸ்டாலின் செப்.28) அதிகாாலை 4 மணியளவில் வருகை தந்தார். இறந்தவர்களின் உடல்களுக்கு மரியாதை செலுத்திய ஸ்டாலின் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசினார்