கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகம் பழைய அவசர சிகிச்சை கட்டடத்துக்கு மாற்றம்
கரூர், கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகம், பழைய அரசு மருத்துவமனையின், அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.கரூர்-வாங்கல் சாலையில் கடந்த, 100 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கட்டடம் உள்ளது. அதில், கரூர் ஆர்.டி.ஓ., அலு வலகம், பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டது. இதற்கு முன்பாக, அதே கட்டட த்தில் கடந்த, 1993 முதல் சில ஆண்டுகளாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் செயல்பட்டது.தற்போது, ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடம் பழுதடைந்தது காரணமாக, பத்திரப் பதிவு கட்டடம், வெங்கமேடு எஸ்.பி. காலனி பஸ் ஸ்டாப் அருகே மாற்றப்பட்டுள்ளது. கரூர் நகரில் செயல்பட்டு வந்த, அரசு மருத்துவமனை காந்தி கிராமத்தில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.ஆர்.டி.ஓ., அலுவலகம், பழைய அரசு மருத்துவமனையில் காலியாக இருந்த அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், கரூர் அரசு மருத்துவமனையின், அவசர சிகிச்சை பிரிவு கட்டடம், பெயின்ட் பூசப்பட்டு, புதிய பொலிவுடன் காட்சியளிக்கிறது.