உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் சிலவரி செய்திகள்...

கரூர் சிலவரி செய்திகள்...

மாரியம்மன் கோவில் திருவிழா அம்மன் குடிபுகுதலுடன் நிறைவுகரூர்: கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா, அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சியுடன், நேற்று நிறைவடைந்தது.கரூரில் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும், வைகாசி மாத திருவிழா, கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பின், பூச்சொரிதல், காப்பு கட்டுதல், மகா சண்டியாகம், தேரோட்டம், அலகு குத்துதல், மாவிளக்கு, அக்னி கரகம் ஊர்வலம், கம்பம் ஆற்றுக்கு செல்லுதல், பஞ்ச பிரகாரம், புஷ்ப பல்லக்கு, ஊஞ்சல் உற்சவ பெருவிழா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று, அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சியுடன், மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நிறைவடைந்தது. அப்போது, நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.சுப முகூர்த்த நாட்களால்வாழை விற்பனை ஜோர்கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, மகிளிப்பட்டி, நந்தன் கோட்டை, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில், விவசாயிகள் அதிகளவில் வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டியில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, முகூர்த்த நாட்களால் வாழைத்தார் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இதில், பூவன் தார், 400 ரூபாய், கற்பூரவள்ளி, 350 ரூபாய், ரஸ்தாளி, 450 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சென்றனர்.லட்சுமணம்பட்டி கிராமத்தில்பாம்பலம்மன் கோவில் விழாகிருஷ்ணராயபுரம், ஜூன் 10-லட்சுமணம்பட்டி கிராமத்தில் பாம்பலம்மன் கோவில் திருவிழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, பூஜைகள் செய்யப்பட்டன.கரூர் மாவட்டம், பழையஜெயங்கொண்டம் டவுன் பஞ்.,க்குட்பட்ட லட்சுமணம்பட்டி கிராமத்தில் பாம்பலம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி, பக்தர்கள் பால்குடம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், அழகு குத்துதல், நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். தொடர்ந்து, பாம்பலம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவிற்கு, கரூர் மற்றும் பழைய ஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி ஆகிய பகுதியில் இருந்து ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்திரா நகர் பிரிவில்மேம்பாலம் தேவைஅரவக்குறிச்சி: கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், இந்திரா நகர் அருகே நெடுஞ்சாலையிலிருந்து மண்மாரி வழியாக பள்ளப்பட்டிக்குள் செல்லும் பிரிவு சாலை உள்ளது.திண்டுக்கல்லில் இருந்து பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி வழியாக கரூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் இந்திரா நகர் பிரிவு ரோடு வழியாக செல்ல வேண்டும். மேலும், வேலஞ்செட்டியூர், பெத்தாச்சி நகர், ஈசநத்தம், அம்மாபட்டி, ஜமீன் ஆத்துார், கருங்கல்பட்டி, பண்ணப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து கூலி வேலை செய்ய தொழிலாளர்கள் பள்ளப்பட்டி செல்ல வேண்டுமானால், இந்திரா நகரில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை குறுக்காக கடந்து செல்ல வேண்டும்.தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து வாகனங்களும் வேகமாக சென்று வரும் நிலையில், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை இந்திரா நகர் பிரிவில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ