உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலர் கைது

கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலர் கைது

கரூர்; கரூரில் நடந்த த.வெ.க., பிரசார கூட்டத்தில், 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த, 27ம் தேதி இரவு த.வெ.க., பிரசார கூட்டத்தில், அக்கட்சி தலைவர் விஜய் பேசினார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் கொடுத்த புகார்படி, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணை செயலர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகன் உட்பட பலர் மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த, கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகனை, கரூர் டவுன் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். தொடர்ந்து, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல் குமார் ஆகியோரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !