உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரம் பகுதியில் தொடர் மழையால் மகிழ்ச்சி

கிருஷ்ணராயபுரம் பகுதியில் தொடர் மழையால் மகிழ்ச்சி

கிருஷ்ணராயபுரம் பகுதியில்தொடர் மழையால் மகிழ்ச்சிகிருஷ்ணராயபுரம், அக். 15-கிருஷ்ணராயபுரம் பகுதியில், பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப்பேட்டை, மகாதானபுரம், பஞ்சப்பட்டி, பழைய ஜெயங்கொண்டம், சேங்கல், மாயனுார், மணவாசி, மேட்டுப்பட்டி, புனவாசிப்பட்டி, சிவாயம், பாப்பகாப்பட்டி, பலாப்பட்டி, வயலுார் ஆகிய இடங்களில் பரவலாக நேற்று காலை முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்தது. இந்த மழையால் கிணறுகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருகிறது. விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல், மரவள்ளி கிழங்கு, எள், துவரை, ஆகிய பயிர்களுக்கு மழை நீர் கிடைத்துள்ளது. மழையால் பயிர்கள் பசுமையாக செழிப்பாக வளர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ