மேலும் செய்திகள்
இன்று இனிதாக (20.08.2025) திருவள்ளூர்
20-Aug-2025
குளித்தலை: குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், இன்று (14ம் தேதி) கும்பாபிேஷக விழா நடக்கிறது.ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோ-விலில், தரைத்தளத்தில் விநாயகர், தண்டபாணி, விசாலட்சி உட-னமர் விஸ்வநாதர், நவக்கிரகம், பரிவார சகித வைரபெருமாள், கருப்பண்ணசுவாமி கோவில்கள் உள்ளன.கும்பாபிஷேக விழா-யொட்டி, நேற்று காலை விக்னேஸ்வரர் பூஜை நடந்தது. தொடர்ந்து கோபுரத்தில் வைக்கக்கூடிய கலசத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு முதல் கால யாக வேள்வி பூஜைகள் நடந்தன. இன்று இரண்டாம் கால யாகபூஜை முடிந்து காலை, 6:30 மணிக்கு கடம் புறப்பாடு நிகழ்ச்சி, 7:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 8:00 மணிக்கு மூலவ-ருக்கு நன்னீராட்டு பெருவிழா, மகா அபிஷேகம், பிரசாதம் வழங்கல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
20-Aug-2025