வையக்கம்மாள் கோவிலில் கும்பிடு விழா தொடக்கம்
கரூர்: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வெஞ்சமாங்கூடலுார் அருகே ராசாப்பட்டியில் ஸ்ரீவையக்கம்மாள் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பிடு விழா, இன்று மதியம், 2:00 மணிக்கு பால்-வார்பட்டியில் இருந்து இளவக்கூடை கோவில் புறப்படுதலுடன் தொடங்குகிறது. மாலை, 5:00 மணிக்கு பாலாபிஷேகம், விசேஷ பூஜைகள், தீபாராதனை நடக்கிறது.நாளை மதியம், 2:00 மணிக்கு சலகை எருது ஓட்டம் நடக்க உள்-ளது. விழா ஏற்பாடுகளை பால்வார்பட்டி, குரும்பபட்டி பொது-மக்கள் செய்து வருகின்றனர்.