உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தென்னிலை அருகே கூலி தொழிலாளி மர்ம சாவு

தென்னிலை அருகே கூலி தொழிலாளி மர்ம சாவு

கரூர், தென்னிலை அருகே, கிணற்றில் கூலி தொழிலாளி, மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.கரூர் மாவட்டம், தென்னிலை பால்வார்பட்டியை சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் ஆனந்தன், 48, கூலி தொழிலாளி. கடந்த சில ஆண்டுகளாக, மனைவியை விட்டு தனியாக வசித்து வந்தார்.இந்நிலையில் கடந்த, 1ல் வேலைக்கு சென்ற ஆனந்தன் வீடு திரும்பவில்லை. பால்வார்பட்டி காளியம்மன் கோவில் அருகே, பொது கிணற்றில் ஆனந்தன் உடல் இருப்பது தெரியவந்தது. இது குறித்து, ஆனந்தனின் சகோதரி ஆனந்த குமாரி, 40; போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து, ஆனந்தனின் உடலை தென்னிலை போலீசார் கைப்பற்றி, ஆனந்தன் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை