மேலும் செய்திகள்
32 மையங்களில் நடந்த இலக்கிய திறனறி தேர்வு
12-Oct-2025
கரூர்: தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு, தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும் என, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் மலைக்கொழுந்தன், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில், தமிழ் மொழி இலக்கிய திறனையும் மாணவர்களிடம் மேம்படுத்தும் வண்ணம் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு ஆண்டுதோறும் பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு நடத்தப்படுகிறது. நடப்பாண்டு தமிழ் இலக்கிய திறனறி தேர்வு தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில், நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்வுக்கு அறை கண்காணிப்பாளர் பணிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை நாளாகும். விடுமுறை நாளில் பணி செய்த ஆசிரியர்களுக்கு அரசு விதிப்படி சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு.எனவே, தமிழ் இலக்கிய திறனறித் தேர்வில் கலந்துகொண்டு பணி செய்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
12-Oct-2025