மேலும் செய்திகள்
இலக்கிய பேரவை விழா
28-Mar-2025
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், ஆங்கிலத்துறை சார்பில் ஆங்கில இலக்கிய மன்ற துவக்க விழா மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா நடைபெற்றது.முதல்வர் வசந்தி தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் காளீஸ்வரி முன்னிலை வகித்தார். தரகம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் ஜோதிலட்சுமி பேசுகையில், ''இலக்கியமும், மன ஆரோக்கியமும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துள்ளன. இலக்கியம் என்பது ஒருவரின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்து-வதற்கும், மனநல பிரச்னைகளை சமாளிப்பதற்கும் ஒரு பய-னுள்ள கருவியாகும். கதை, கவிதை, நாடகங்கள் போன்ற இலக்-கிய வடிவங்கள், நம்முடைய உணர்வுகளையும், அனுபவங்க-ளையும் வெளிப்படுத்தவும், மற்றவர்களுடன் ஒரு தொடர்பை ஏற்-படுத்தவும் உதவுகின்றன,'' என்றார்.கடந்த ஓராண்டாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. அனைத்து துறை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
28-Mar-2025