மேலும் செய்திகள்
நாளை உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
23-Oct-2024
உங்களை தேடி, உங்கள்ஊரில் திட்ட கள ஆய்வுகரூர், நவ. 22-அரவக்குறிச்சி வட்டத்தில், உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், கலெக்டர் தங்கவேல் கள ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, அவர் கூறியதாவது: அரவக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட, 40 வருவாய் கிராமங்களிலும் குடிநீர் பணி, சுகாதார வசதி உள்ளிட்டவை குறித்து களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வெளி, உள் நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள், மருந்து கிடங்கு உள்ளிட்டவைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அரவக்குறிச்சி பஸ் ஸ்டாண்டில் விளக்குகள் சரியாக எரிகிறதா, பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் உள்ளதா என்பது குறித்து கேட்டறியப்பட்டது. இவ்வாறு கூறினார்.ஆய்வின் போது, அரவக்குறிச்சி டவுன் பஞ்., அலுவலர் ஆனந்தன், கலெக்டர் நேர்முக உதவியாளர் மகளிர் (சத்துணவு) தேன்மொழி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
23-Oct-2024