மேலும் செய்திகள்
மணல் கடத்தல்; டிரைவர் கைது
12-Dec-2024
குளித்தலை: குளித்தலை அடுத்த, கடவூர் தாலுகா பகுதியில் மணல், கிராவல் மண் மற்றும் கனிமங்கள் கடத்-தப்பட்டு வருவதாக வந்த தகவல்படி, கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் சங்கர் தலைமையில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் தரகம்பட்டி நெடுஞ்சாலையில் டி.சீத்தப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே வேகமாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி, ஐந்து யூனிட் மணல் கடத்தியது தெரியவந்தது. டாரஸ் லாரி, டிரைவரை சிந்தமாமணிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். சிந்தமாணிப்பட்டி போலீசார் விசாரித்து, கன்னியாகுமரி மாவட்டம், அரு-மனை சேர்ந்த டிரைவர் சாபுவை, 43, கைது செய்-தனர்.
12-Dec-2024