உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரயில்வே கேட் மீது லாரி மோதியது 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ரயில்வே கேட் மீது லாரி மோதியது 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

குளித்தலை, குளித்தலை சுங்ககேட் அருகே, மணப்பாறை சாலையில் ரயில்வே கேட் மீது லாரி மோதியதால் கேட் திறந்து மூடுவதில் ஏற்பட்ட பழுது காரணமாக, ஒரு மணி நேரமாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.குளித்தலை சுங்ககேட் அருகே, மணப்பாறை நெடுஞ்சாலையில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில் பாதையில் ஒரு நாளைக்கு, 50க்கு மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. அய்யர்மலை, கோட்டைமேடு, சத்தியமங்கலம் சுற்றுப்பகுதி ஊர்களில் இருந்து வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, மாணவ மாணவிரை ஏற்றி செல்லும் வாகனங்களும் ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றன.இந்நிலையில் நேற்று காலை, காரைக்கால் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் வருவதற்காக கேட் கீப்பர் கேட்டை மூடிக்கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த லாரி, கடந்து சென்று விடலாம் என்பதற்காக வேகமாக வந்து, ரயில்வே கேட் மீது மோதியது. இதில் கேட் பழுதானதால் சரிவர மூடப்படாமல் முடங்கியது. இதனால் சாலையின் இரு புறத்திலும் 1 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பைக் மற்றும் நடந்து செல்பவர்கள் ரயில்வே கேட் பாதையை குனிந்தபடி கடந்து சென்றனர். ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர் அவதிக்குள்ளாகினர். இங்கு ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை