திருமணம் செய்ய மறுத்த மாணவி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
குளித்தலை, குளித்தலை அடுத்த குளக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர், 21 வயது மாணவி; இவர், திருச்சியில் உள்ள ஒரு கல்லுாரியில் படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த ரஞ்சித், 28, என்பவர், மாணவி விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வரும்போது, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மிரட்டி வந்துள்ளார். கடந்த அக்., 31-ல் ஊருக்கு வந்த மாணவியிடம், மொபைல் போனில் தொடர்பு கொண்ட ரஞ்சித், தன்னை திருமணம் செய்யாவிட்டால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.பின், மாணவி வீட்டில் துாங்கி கொண்டிருந்தபோது, ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த ரஞ்சித், கையில் வைத்திருந்த ஏதோ ஒரு திரவத்தை மாணவி மீது ஊற்றியுள்ளார். வலி தாங்க முடியாமல் மாணவி கதறி துடித்துள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த மாணவியின் பெற்றோர், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து கல்லுாரி மாணவி கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் ரஞ்சித்தை கைது செய்தனர்.