மேலும் செய்திகள்
பனைமரம் ஏறிய வாலிபர் தவறி விழுந்து பலி
03-Apr-2025
கரூர்: வாங்கல் அருகே, பனை மரத்தில் ஏறிய போது, தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், வாங்கல் வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் தென்-னரசு, 33; இவர் நேற்று முன்தினம் சங்ககோட்டை பகுதியில் உள்ள, பனை மரத்தில் ஏறியுள்ளார். அப்போது, தேனீக்கள் கொட்டியதில் வலி தாங்க முடியாமல், தென்னரசு பனை மரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதனால், அருகில் இருந்தவர்கள் தென்-னரசுவை, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து, தென்னரசுவின் மனைவி பிரியங்கா, 30; கொடுத்த புகார்படி, வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்-றனர்.
03-Apr-2025