உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் /  ஓடும் ரயிலில் இறங்கியவர் சக்கரத்தில் சிக்கி பலி

 ஓடும் ரயிலில் இறங்கியவர் சக்கரத்தில் சிக்கி பலி

கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷனில், ரயிலில் இருந்து இறங்கும் போது, தவறி விழுந்து நிதி நிறுவன உரிமையாளர் உயிரிழந்தார். கரூர் மாவட்டம், மண்மங்கலம் துவரப்பாளையத்தை சேர்ந்த முருகேசன், 46. கர்நாடகா மாநிலம், மங்களூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர், நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, மங்களூரு - புதுச்சேரி விரைவு ரயிலில், கரூர் ரயில்வே ஸ்டேஷன் வந்தார். நல்ல துாக்கத்தில் இருந்தவருக்கு, ரயில் கரூர் வந்தது தெரியவில்லை. திடீரென கண் விழித்த முருகேசன், நான்காவது பிளாட்பாரத்தில் இருந்து ரயில் புறப்படும் போது, கீழே இறங்கினார். அப்போது, எதிர்பாராத விதமாக ரயில் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில்வே போலீசார், முருகேசன் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை