அரசு மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
கரூர், புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம், தலைவர் தங்கமணி தலைமையில் நடந்தது.அதில், போக்சோ குற்றங்கள், பாலியல் குற்றங்கள் தடுப்பு நடவடிக்கை எடுத்தல், வங்கி சேமிப்பு கணக்கின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு போதித்தல், உயர்க்கல்வி கற்பதன் அவசியம், மேலாண்மை குழு வளர்ச்சி பணிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், பள்ளி தலைமையாசிரியர் விஜயன், உதவி தலைமையாசிரியர்கள் யுவராஜா, பொன்னுசாமி, நகராட்சி கவுன்சிலர் கல்யாணி, மேலாண்மை குழு உறுப்பினர்கள் அவிநாசி லிங்கம், திருமலை, உயர்க்கல்வி வழிகாட்டி ஆசிரியர் குப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.