உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 5 ஆண்டுக்கு பின் மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் துவக்கம்

5 ஆண்டுக்கு பின் மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் துவக்கம்

குளித்தலை,குளித்தலை, முத்து பூபாலசத்திரம் மாரிம்மன் கோவில் திருவிழா, 5 ஆண்டுகளுக்கு பின்பு இன்று துவங்குகிறது.காலை 10:00 மணியளவில் பெரியபாலம் மலையப்பன் நகரில் இருந்து, கோவிலுக்கு பாத்தியப்பட்ட குடிப்பாட்டுக்காரர்கள் ஒன்று சேர்ந்து, அலங்கார வாகனத்தில் கம்பம் வைத்து முக்கிய வீதிகள் வழியாக கொண்டு வருதல், பின்னர் இரவு அம்மனுக்கு கம்பம் நடுதல், தொடர்ந்து குளித்தலை மற்றும் மணத்தட்டை, வாலாந்துார், கோட்டமேடு, குட்டப்பட்டி, வை.புதுார், எழுநுாற்றுமங்கலம், வதியம், கண்டியூர், தண்ணீர்பள்ளி, பட்டவர்த்தி, மருதுார், மேட்டுமருதுார், பரளி, கருங்காளாப்பள்ளி,ராஜேந்திரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்தும் மற்றும் நகராட்சி பகுதியில் இருந்தும், தொழிற்சங்கம் சார்பாகவும், அலங்கார வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.வரும், 18ல் பெரியபால்குடம் மற்றும் அரண்மனை மாவிளக்கு, 20ல் திருத்தேர் வடம் பிடித்தல் தொடர்ந்து பூக்குழி இறங்குதல், 22ல் முத்து பல்லக்கு திருவீதி உலா, 23ல் கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை