மேலும் செய்திகள்
பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்
01-Dec-2024
கரூர்: க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், புன்னம் அருகில் உள்ள, பெரிய நடுப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, காப்பு கட்டும் நிகழ்ச்சி கடந்த, 8ல் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அபிஷேகம், பூஜை நடந்து வருகிறது.மாரியம்மனை பல்லக்கில் வைத்து, புன்னை வனநாதர், வரதராஜ பெருமாள் கோவில்கள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, புன்னம் பசுபதிபாளையம் விநாயகர் கோவிலை வந்தடைந்ததுடன் திருவிழா தொடங்கியது. விநாயகர் கோவிலில் வைத்து, மாரியம்மனை பக்தர்கள் வழிபாடு செய்து, மாவிளக்கு பூஜை நடத்தினர்.நேற்று, கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை, ஆராதனை செய்யப்பட்டது. பின், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில், ஒவ்வொரு பானையிலும் பொங்கல் எடுக்கப்பட்டு, அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து படையலிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து மாரியம்மன் திருவீதி உலா நடந்தது. மஞ்சள் நீர் விளையாட்டு, இரவு வாண வேடிக்கையுடன் மாரியம்மனை மீண்டும் ஊர்வலமாக எடுத்து சென்றதுடன் விழா நிறைவடைந்தது.
01-Dec-2024