மேலும் செய்திகள்
மனைவி மாயம் கணவர் புகார்
24-Oct-2026
குளித்தலை:குளித்தலை அடுத்த சிவாயம் பஞ்., ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம், 63. இவரது மகன் பாலமுருகன், இவரது மனைவி தங்க தமிழ்ச்செல்வி, 24. இவர்களுக்கு மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. பாலமுருகன், தங்கதமிழ்ச்செல்வி இடையே நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்து கொண்டு, வீட்டை விட்டு வெளியே சென்ற தங்க தமிழ்ச்செல்வி, வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
24-Oct-2026