உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் கட்டளை வாய்க்கால் ஆகாயத்தாமரைகளால் பாதிப்பு

மாயனுார் கட்டளை வாய்க்கால் ஆகாயத்தாமரைகளால் பாதிப்பு

கிருஷ்ணராயபுரம்:மாயனுார் அருகேயுள்ள, கட்டளை வாய்க்காலில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரைகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் அருகே மாயனுாரில் கதவணை உள்ளது. தற்போது கதவணைக்கு அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இங்கிருந்து கிருஷ்ணராயபுரம், குளித்தலை மற்றும் திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு, கட்டளை வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அதிகரித்து வரும் காவிரி நீரால், பல இடங்களில் இருந்து வரும் ஆகாயத்தாமரை, கட்டளை வாய்க்கால் கரையிலும், ஷட்டர் அருகிலும் தேங்கியுள்ளதால் பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் போது, சிரமம் ஏற்பட்டுள்ளது.எனவே, கட்டளை வாய்க்காலில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி, துாய்மையான தண்ணீரை பாசனத்திற்கு செல்ல, நீர்வளத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி