மாயனுார் மின் பொறியாளர் அலுவலகம் புதிய கட்டடத்தில் இயங்கும்: பொறியாளர்
கரூர்: 'மாயனுார் உதவி மின் பொறியாளர் அலுவலகம், புதிய கட்ட-டத்தில் இயங்க உள்ளது' என, கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கரூர் மாவட்டம், மாயனுார் உதவி மின் பொறியாளர் அலுவ-லகம், மாயனுார் புதிய தெரு எண்: 158/2 என்ற முகவரியில் இயங்க உள்ளது. நிர்வாக வசதி மற்றும் நுகர்வோர் சேவைக்கா-கவும், நுகர்வோர் மின் கட்டணம் செலுத்தவும், அனைத்து வகை-யான மின் சேவைக்கும், இந்த முகவரியில் இயங்க உள்ள அலுவ-லகத்தை தொடர்பு கொள்ளலாம்.மாயனுார், சேங்கல், முனையனுார், மலைப்பட்டி, அழகாபுரி, குப்புரெட்டிப்பட்டி, லட்சுமணம்பட்டி, தொட்டியப்பட்டி, தாராபு-ரத்தனுார், செக்கணம், முடக்கு சாலை, பழைய ஜெயங்-கொண்டம், புதுப்பட்டி, உடைகுளத்துப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த நுகர்வோர்கள், இந்த அலுவலகத்தை பயன்படுத்திக்-கொள்ளலாம். மேலும், இந்த அலுவலக மின் பொறியாளரை, 9445854123 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.