உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி பணி

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி பணி

கரூர்: கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் வரும், 30 வரை அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி, 5வது சுற்று போடும் பணி நடக்கிறது. ஜூலை 1 முதல், 10 வரை விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படவுள்ளது. கோமாரி நோயினால் மாடுகளில் சினைப்பிடிக்காமல் போவது, பால் உற்பத்தி குறைதல், எருதுகளின் வேலைத்திறன் பாதிப்பு மற்றும் கன்றுகளில் அதிக இறப்பு ஆகியவை ஏற்பட்டு, கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார இழப்பு நேரிடுகிறது.ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, மாவட்டத்தில் உள்ள அனைத்து மாட்டினம் மற்றும் எருமையினங்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. கால்நடை மருந்தக எல்லைக்குட்பட்ட கிராமங்களில், 75 குழுக்கள் மூலம் மூன்று மாத வயதுக்கு மேற்பட்ட அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை