உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குப்பை எரிப்பதை தடுக்க நடவடிக்கை வேண்டும்

குப்பை எரிப்பதை தடுக்க நடவடிக்கை வேண்டும்

கரூர்: கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை, வேலாயுதம்பாளையம் பகுதிகளில், பொது மக்கள் சாலைகளில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதன் மீது சிலர் தீ வைத்து விடுகின்றனர். இதனால், வேலாயுதம் பாளையம் சாலை, நாள்தோறும் புகை மண்டலமாக உள்ளது.அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதை, புகழூர் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதால், புகை மூட்டதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் குப்பையை கொட்டும் வகையில், தொட்டிகளை வைக்க புகழூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை