மேலும் செய்திகள்
நிர்வாகிகள் தேர்வு நாமகிரிப்பேட்டை:
21-Jul-2025
கிருஷ்ணராயபுரம், குளித்தலை நகரத்திற்கு உட்பட்ட, மருத்துவ முடித்திருத்துவோர் நல சங்க ஆலோசனை கூட்டம் கடம்பர்கோவில் அருகில் நடந்தது.குளித்தலை, கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் உள்ள மருத்துவ முடித்திருத்துவோர் நல சங்கம் சார்பில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், குளித்தலை நகர தலைவராக அசோக், செயலாளராக சுந்தரம், பொருளாளராக பாண்டியன், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், சங்க உறுப்பினர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை தொழிலாளர்களுக்கு தொழில் முன்னேற்றம் காணும் வகையில், மாநில அரசு தொழில் கடன் வழங்க உதவ வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
21-Jul-2025