ஓட்டுச்சாவடி மைய முகவர்கள் கூட்டம்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் தி.மு.க., டவுன் பஞ்சாயத்து ஓட்டுச்சாவடி நிலைய முகவர்கள் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணராயபுரத்தில் நடந்தது.கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதி பார்வையாளர் மாநில வர்த்தக அணி துணை தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். இதில், டவுன் பஞ்சாயத்து வார்டுகளில் உள்ள வாக்காளர் பட்-டியல் சரிபார்ப்பு, புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், விடுபட்-டவர்களை கண்டறிதல் குறித்து மைய முகவர்களிடம் விரிவாக ஆலோசனை வழங்கப்பட்டது.கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.,சிவகாமசுந்தரி, கிருஷ்ணராயபுரம் தி.மு.க., நகர செயலாளர் சசிக்குமார், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிராஜா, மாவட்ட ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் அம்பிகாபதி, விவசாய அணி துணை அமைப்-பாளர் பரமசிவம் மற்றும் டவுன் பஞ்சாயத்து நகர கட்சி நிர்வா-கிகள், பாக முகவர்கள் கலந்து கொண்டனர்.