வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து பூத் லெவல் அலுவலர்களுடன் கூட்டம்
குளித்தலை, குளித்தலை அடுத்த கடவூர் தாசில்தார் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து பூத் லெவல் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், தாசில்தார் ராஜாமணி தலைமையில் நடந்தது.வட்ட வழங்கல் அலுவலர் பெரியசாமி, மைலம்பட்டி ஆர்.ஐ., அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் பேசியதாவது:வாக்காளர் பட்டியல் திருத்தம் படிவத்தில் கவனமாக திருத்தம் செய்ய வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்த்தல், இறந்து போன வாக்காளர்களை நீக்குதல் போன்ற பணிகளை வீடு, வீடாக சென்று களப்பணிகள் மூலம் உண்மை தன்மைகளை அறிந்து செய்ய வேண்டும், கடைசியாக வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது கடந்த, 2002ம் ஆண்டு நடந்தது. அதற்கு பிறகு இந்தாண்டு சிறப்பு தீவிர திருத்தம் முறை நடைபெறுகிறது.இதனால் 2002ம் ஆண்டு பட்டியலில் உள்ள பெயர்கள் தற்போது, 2025 புதிய பட்டியலில் உள்ளதா என்று தரவாக ஆய்வு செய்ய வேண்டும்.இதில் தங்களது மொபைல்போன் மூலம் களப்பணிகள் செய்வதால் வாக்காளர்களை நீக்குவது, புதிய வாக்காளர்களை இணைப்பது, வாக்காளர்களை விடுபடாமல் சரிபார்த்தல் ஆகிய பணிகளை மிக கவனமாக அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு பேசினார்.கடவூர் வட்டார வி.ஏ.ஓ.,க்கள், உதவியாளர்கள், பூத் லெவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.