உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

அரவக்குறிச்சி: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், பள்ளப்பட்டியில் சிறுபான்-மையினர் உரிமைகள் தினவிழா நடந்தது,பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர் ஜான் சிறப்பாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், மக்களுக்கு அரசின் பல்-வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, சுய-தொழில் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், தையல் பயிற்சி முடித்த, 30க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தையல் மிஷின், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.சிறுபான்மையர் சமூக மக்களின் உரிமை, கல்வி உதவித்-தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்-கான அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்-டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ