உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முருங்கை விலை கணிசமாக உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

முருங்கை விலை கணிசமாக உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முருங்கை விலை சற்று அதிகரிப்பால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில், கால்நடை வளர்ப்பு தொழிலுக்கு அடுத்தபடியாக முருங்கை விவசாயம் பிரதானமாக உள்ளது. கரும்பு முருங்கை, செடி முருங்கை, மர முருங்கை என மூன்று வகையான முறையல், உற்பத்தி செய்யப்படுகிறது.கடந்த மார்ச் முதல் முருங்கை சீசன் தொடங்கியது. கடந்த மாதம் மரம் முருங்கை கிலோ, 24 ரூபாய், செடி முருங்கை, 38 ரூபாய், கரும்பு முருங்கை, 37 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், தற்போது விலையில் கணிசமாக மாற்றம் ஏற்பட்டு மரம் முருங்கை கிலோ, 47, செடி முருங்கை, 67, கரும்பு முருங்கை, 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. முருங்கை வரத்து குறைந்து, விலை சற்று அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை