உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கொசுவலை படுக்கைகள் விற்பனை ஜோர்

கொசுவலை படுக்கைகள் விற்பனை ஜோர்

கரூர், கரூர் மாவட்டத்தில், 40க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான, கொசு வலை உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகிறது. அதில், நேரிடையாகவும், மறைமுகமாகவும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கரூர், சணப்பிரட்டி, பசுபதிபாளையம், தான்தோன்றி மலை, ராமாகவுண்டனுார், தொழிற்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கொசுவலை தயார் செய்ய, 3,000 தறிகள் உள்ளன.கரூரில் தயாரிக்கப்படும் கொசுவலைகள், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட, பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த, 40 ஆண்டுகளாக கொசுவலை மட்டும், தயார் செய்த உற்பத்தியாளர்கள், தற்போது, உள்ளூர் தேவைக்காக கொசுவலை, படுக்கைளை தயார் செய்ய தொடங்கியுள்ளனர்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்த கூடிய, கொசுவலை படுக்கைகள் தயார் செய்யப்படுகிறது. துாங்கும் போதும், துாங்கி எழுந்த பிறகும், கொசுவலை படுக்கையை மடித்து பத்திரமாக வைத்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்தப் பட்சம், 1,000 ரூபாய் முதல் 1,800 ரூபாய் வரை கொசுவலை படுக்கை விற்பனை செய்யப்படுகிறது. அதை பொதுமக்கள், ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். மேலும், வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், கொசு உற்பத்தி அதிகரிக்கும் என்பதால், கரூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக கொசுவலை படுக்கைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி