மேலும் செய்திகள்
வீடு புகுந்து 40 சவரன் நகை கொள்ளை
15-Aug-2025
குளித்தலை; தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் தாய், மகளை தாக்கி, 9 லட்சம் ரூபாய், 31 சவரன் நகைகளை கொள்ளையடித்த மூகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம், குளித்தலை, அண்ணா நகரை சேர்ந்தவர் கருணாநிதி. அரசு கல்லுாரி ஓய்வு பெற்ற முதல்வர். இவரது மனைவி சாவித்ரி; குளித்தலையில் தனியார் மெட்ரிக் பள்ளி தாளாளர். ஒரு வாரமாக குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில் மகளுடன் வீடு திரும்பினார். இவர்கள் வீட்டில் கட்டுமான பணி நடக்கிறது. நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் வீட்டின் பின்பகுதி வழியாக, முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் மூன்று பேர், வீட்டின் மேல் மாடி அறைக்குள் நுழைந்து, கருணாநிதி இளைய மகள் அபர்ணாவிடம் கத்தி, அரிவாளை காட்டி மிரட்டினர். அவரது அலறல் கேட்டு, சாவித்ரி சென்று பார்த்தபோது, மகளை அரிவாளால் வெட்டினர். தடுத்த சாவித்ரியையும் வெட்டினர். பின், பீரோவில் இருந்த, 9 லட்சம் ரூபாய், 31 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு, மூவரின் போன்களையும் பறித்துக் கொண்டு காரில் தப்பினர். காயமடைந்த மகள், தாய் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எட்டு தனிப்படை அமைத்து, முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
15-Aug-2025