இளம் பெண் மாயம் போலீசில் தாய் புகார்
கரூர், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் திருகாடுதுறை பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் என்பவரது மனைவி தாரணி, 22. இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து தாய் யோகாம்பாள், 45, வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த, 16ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற தாரணி திரும்பி வரவில்லை. இதுகுறித்து, தாய் யோகாம்பாள் போலீசில் புகார் செய்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் தாரணியை தேடி வருகின்றனர்.