மேலும் செய்திகள்
தந்தை இறந்த துக்கத்தில் மகன் விபரீத முடிவு
05-Dec-2024
குளித்தலை: குளித்தலை அருகே மாமியார், மருமகன் ஒரே நாளில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., பாலசமுத்திப்பட்டி எம்.ஜி.ஆர். நகர் காலனியை சேர்ந்தவர் ரெங்கன் மனைவி மாரியாயி, 73. இவரது ஒரே மகள் சித்ரா, 40. இவரை அருகில் உள்ள வடசேரி கிராமத்தில், சவுந்தர்ராஜனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். பின்னர் சில ஆண்டுகளில், மாரியாயி கணவர் ரெங்கன் இறந்துவிட்டார். மாரியாயி தனது மகள் சித்ரா குடும்பத்துடன் வசித்து வந்தார்.சில நாட்களுக்கு முன் தொடர் மழை பெய்தபோது, மாரியாயி சேற்றில் வழுக்கி விழுந்ததில் பலத்த காயமடைந்து வீட்டில் இருந்து வந்தார். இதேபோல், சித்ராவின் கணவர் சவுந்தர்ராஜனும் நோய்வாய்ப்பட்டு வீட்டில் இருந்தார். இருவரையும் பராமரித்து வந்த சித்ரா, வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு மிகுந்த சிரமப்பட்டார். கடந்த, 29 இரவு, 9:00 மணியளவில் மாரியாயி இறந்தார். இதனால், சித்ரா தனது தாய் இறந்த துக்கம் தாங்காமல் நள்ளிரவில் அழுது கொண்டு இருந்தார். இந்நிலையில், மாமியார் இறந்ததையறிந்த சவுந்தர்ராஜன், அதிர்ச்சியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு அன்று நள்ளிரவு 2:00 மணியளவில் இறந்துள்ளார். இதையறிந்த சித்ரா, தனக்கு ஆதரவாக இருந்த தாயும், கணவரும் ஒரே நேரத்தில் இறந்துவிட்டார்களே என்று கதறி அழுதுள்ளார். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.தாய் மாரியாயி, கணவர் சவுந்தர்ராஜன் இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கையில் உள்ள சிறிது பணத்தையும் செலவு செய்த நிலையில், இருவரும் ஒரே நாளில் இறந்ததால், இரு குழந்தைகளுடன் இறுதி சடங்கு செலவிற்கு பணம் இல்லாமல் சித்ரா தவித்துள்ளார். இதையறிந்த வடசேரி பஞ்., தலைவர் சரவணன், எம்.ஜி.ஆர். நகர் காலனி மக்கள், இளைஞர்கள், உறவினர்கள் உதவியுடன் இருவரது உடல்களையும் நல்லடக்கம் செய்தனர்.
05-Dec-2024