உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கரூரில் இன்று ஆலோசனை கூட்டம்

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கரூரில் இன்று ஆலோசனை கூட்டம்

கரூர், என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி, தொடர்பாக ஆலோசனை கூட்டம் கரூரில் இன்று நடக்கிறது என, தி.மு.க., கரூர் மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில், என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பயிற்சி கூட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து கரூர் பிரேம் மஹாலில், என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் இன்று மாலை, 5:30 மணிக்கு நடக்கிறது. இதில், கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய தொகுதிகளில் பி.எல்.ஏ.2., பி.ஏ.டி,(ஐ.டி.,விங்) தொடர்பாக ஆலோசனை வழங்கப்படவுள்ளது. இதில், எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள், சட்டசபை தொகுதி பார்வையாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாநகர, நகர, ஒன்றிய உள்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை