உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள், கன்று பலி

மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள், கன்று பலி

மர்ம விலங்கு கடித்து6 ஆடுகள், கன்று பலிநாமகிரிப்பேட்டை, அக். 2-நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., வெள்ளக்கல்பட்டி அடுத்த பசிறுமலை அடிவாரப்பகுதியை சேர்ந்தவர் செல்வம், 60. இவர், 10க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் மாட்டு கொட்டகையில் கால்நடைகளை கட்டிவைத்துவிட்டு சொந்த வேலையாக ராசிபுரம் சென்றார். நேற்று மாலை, திரும்பி வந்து பார்த்தபோது, கொட்டகையில் இருந்த, 6 ஆடுகள், கன்று குட்டி ஆகியவை மர்ம விலங்குகள் கடித்து இறந்து கிடந்தன.நாய்கள் அல்லது பசிறு மலையில் இருந்து வந்த மர்ம விலங்கு கடித்து இறந்திருக்கலாம் என செல்வம் தெரிவித்தார். இறந்த ஆடுகள், கன்று குட்டிகளின் மொத்த மதிப்பு, ஒரு லட்சம் ரூபாயாகும். இப்பகுதியில் நடக்கும் முதல் சம்பவம் இது என்பதால், இப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், இப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் இறந்த கோழிகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக போட்டு விடுகின்றனர். இதை சாப்பிட இப்பகுதியில், 10க்கும் மேற்பட்ட நாய்கள் எப்போதும் சுற்றித்திரிகின்றன. இறந்த கோழிகளை சாப்பிட வந்த நாய்கள், ஆடு, கன்றை கடித்து குதறியிருக்கலாம் என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி