உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நங்கவரம் டவுன் பஞ்., கூட்டம் :14 தீர்மானங்கள் நிறைவேற்றம்

நங்கவரம் டவுன் பஞ்., கூட்டம் :14 தீர்மானங்கள் நிறைவேற்றம்

குளித்தலை:குளித்தலை அடுத்த நங்கவரம் டவுன் பஞ்., அலுவலக கூட்ட அரங்கத்தில் நேற்று சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதில், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்திற்கு டவுன் பஞ்., தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் அன்பழகன், செயல் அலுவலர் காந்தரூபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், நங்கவரம் 8வது வார்டில் காத்திருப்போர் கூடம் அமைத்தல், வி.ஆர்.ஓ., காலனி சமுதாய கழிப்பிடம் அருகில் ஆழ்குழாய் கிணற்றுடன் கூடிய சின்டெக்ஸ் தொட்டி அமைத்தல், மேல் நங்கவரம் நியாய விலை கடை முதல் அண்ணாதுரை டீக்கடை வரை மழை நீர் வடிகால் அமைத்தல், தென்கடை குறிச்சி பஸ் நிறுத்தம் முதல் பகவதி அம்மன் கோவில் வரை மழை நீர் வடிகால் அமைத்தல்.சிமென்ட் சாலை அமைத்தல், பள்ளி மேம்பாட்டு மானிய திட்டம் 2025-26ன் கீழ் நச்சலுார் யூனியன் துவக்கப்பள்ளியில் கழிவறை அமைத்தல், பஸ் நிறுத்தம் அருகில் அங்கன்வாடி கட்டடம் மற்றும் பிற அரசு கட்டடத்தில் உள்ள கழிவறைகளை சீரமைத்தல், தமிழ்ச்சோலை பகுதி அங்கன்வாடி மையத்தில் மறுசீரமைப்பு மற்றும் குடிநீர் வசதி பணி மேற்கொள்ளுதல், சவாரி மேடு பகுதி அங்கன்வாடி மையத்தில் மறு சீரமைப்பு மற்றும் குடிநீர் வசதி பணி மேற்கொள்ளுதல் உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை