உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தேசிய வாக்காளர் தினம் பள்ளியில் கொண்டாட்டம்

தேசிய வாக்காளர் தினம் பள்ளியில் கொண்டாட்டம்

கரூர்: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியம், கவுண்டம்பா-ளையம் தொடக்கப்பள்ளியில், தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது.தலைமை ஆசிரியர் பரணிதரன் தலைமை வகித்தார். மாண-வர்கள், தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக் கொண்-டனர். ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் ஜானகி, சத்யா, நாகேஸ்வரி, சுமதி, நதியா, ஜெயலட்சுமி ஆகியோர், 100 சத-வீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினர்.நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் தெரசாராணி, புவனேஸ்வரி உள்-பட பலர் பங்கேற்றனர்.* அரவக்குறிச்சியில், தனியார் கலை அறிவியல் கல்லுாரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தாசில்தார் மகேந்திரன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். மாணவ, மாண-வியர் வாக்காளர் உறுதிமொழி எடுத்தனர். 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, வாக்களிப்பதன் அவ-சியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை