மேலும் செய்திகள்
நவராத்திரி மூன்றாவது நாள் விழா: கரூரில் கோலாகலம்
06-Oct-2024
நவராத்திரி 8வது நாள் விழா கோவில்களில் சிறப்பு அலங்காரம் கரூர், அக். 11-- நவராத்திரி விழா, எட்டாவது நாளையொட்டி, கரூர் கோவில்களில் உற்சவர் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் நவராத்திரி உற்சவ பெரு விழா கடந்த, 3 ல் தொடங்கியது. நேற்று இரவு எட்டாவது நாளையொட்டி, கரூர் கல்-யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள உற்சவர், மகாவிஷ்ணு அலங்காரத்தில் நேற்று இரவு பக்தர்களுக்கு அருள்பா-லித்தார்.அதேபோல், கரூர் மாரியம்மன் கோவிலில் உற்சவர் மாரியம்மன் அலங்காரம், கரூர் கோடீஸ்வரர் கோவில் உற்சவருக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம், கரூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், உற்சவர் முருகன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கரூர் தெற்கு காந்திகிராம் விநாயகர் கோவிலில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தது.
06-Oct-2024