உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உடைந்த நிலையில் காணப்படும் புதிய சிமென்ட் மின் கம்பங்கள்

உடைந்த நிலையில் காணப்படும் புதிய சிமென்ட் மின் கம்பங்கள்

கரூர், கரூர் மற்றும் சுற்று வட்டார சாலைகளில், புதிய சிமென்ட் கம்பங்கள் உடைந்த நிலையில் உள்ளது.கரூர் மாவட்டத்தில், சேதமடைந்த பழைய சிமென்ட் மின் கம்பங்களை அகற்றி விட்டு, புதிய மின் கம்பங்களை நடுவதற்காக ஆங்காங்கே சாலைகளில், மின் கம்பங்கள் போடப்பட்டுள்ளன. சில பகுதிகளில், பல மாதங்களாக போடப்பட்டுள்ள புதிய சிமென்ட் மின் கம்பங்கள் உடைந்த நிலையில் உள்ளது. அதை மின்வாரிய அதிகாரிகள், கண்டுகொள்ளாமல் உள்ளனர்.குறிப்பாக, கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே, பல புதிய சிமென்ட் மின் கம்பங்கள் உடைந்த நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, புதிய சிமென்ட் மின் கம்பங்கள் உடைவதை தடுக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை