உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாநகராட்சியில் ரூ.7.41 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகள்

கரூர் மாநகராட்சியில் ரூ.7.41 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகள்

கரூர், கரூர் மாநகராட்சியில், 7.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 75 புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை செய்தும், முடிவுற்ற 9 பணிகளை கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி திறந்தும் வைத்தார். -------------------------------------------கரூர் மாநகராட்சியில் புதிய பணிகளுக்கு பூமி பூஜை, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்தும் வைத்தார்.அதன்படி கரூர் மாநகராட்சி, 1 முதல், 8, 21 முதல், 26, 29 முதல், 34 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கும் பணி, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, ஆழ்குழாய் கிணறுடன் கூடிய சின்டெக்ஸ் தொட்டி அமைத்து பைப் லைன் விஸ்தரிப்பு செய்தல் பணி, சிறு பாலங்கள் அமைக்கும் பணி, சாலை இணைப்பில் மராமத்து, சிமென்ட் சாலை மேம்படுத்தும் பணி, தார்ச்சாலை மேம்படுத்தும் பணி என மொத்தம், 7.41 கோடி ரூபாய் மதிப்பில், 75 புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை செய்தும், 9 முடிவுற்ற பணிகளை எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி திறந்தும் வைத்தார். நிகழ்ச்சியில், மாநக ராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மண்டல குழு தலைவர்கள் கனகராஜ், அன்பரசன், ராஜா, சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை