புதிய டவுன் பஸ் வழித்தடம் துவக்கம்
குளித்தலை: குளித்தலை அடுத்த, மேட்டுமருதுாரில் நேற்று காலை புதிய டவுன் பஸ் வழித்தடம் தொடக்க விழா நடந்தது.மருதுார் டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். மருதுார் நகர செயலாளர் ரவி, மாஜி மாவட்ட பஞ்., குழு துணைத்தலைவர் தேன்மொழி, ஒன்றிய செயலாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளித்தலையில் இருந்து பரளி, கூடலுார், மேட்டுமருதுார், குமாரமங்கலம் வழியாக பெட்டவாய்த்தலை சென்று வந்த அரசு டவுன் பஸ்சை, ராணி மங்கம்மாள் சாலையில் இருந்து மேட்டுமருதுார் கிராமம் மாரியம்மன் கோவில் வந்து செல்லும் புதிய வழித்தடத்தை எம்.எல்.ஏ., மாணிக்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதேபோல் பாதிரிப்பட்டியில் ஆலமரத்துப்பட்டி, பில்லுார், பாதிரிப்பட்டி, தோகைமலை வழியாக பாளையம், கலெக்டர் ஆபிஸ் கரூர் வரை செல்லும் அரசு பஸ் புதிய வழித்தடத்தையும் தொடங்கி வைத்தார்.முன்னாள் எம்.எல்.ஏ., ராமர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.