உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் புத்தாண்டு விழா கோலாகலம்

கரூர் மாவட்டத்தில் புத்தாண்டு விழா கோலாகலம்

கரூர், ஜன. 2- ஆங்கில புத்தாண்டையொட்டி கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்கள், சர்ச்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.* கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், தான்தோன்றிமலை வெங்கடரமண கோவில், கரூர் மாரியம்மன் கோவில் மற்றும் ஐயப்பன் கோவில்களில், ஆங்கில புத்தாண்டையொட்டி, நேற்று காலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. அண்ணா நகர் கற்பக விநாயகர் கோவிலில், மூலவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அதேபோல், கரூர் வெண்ணைமலை, வேலாயுதம்பாளையம் புகழூர், க.பரமத்தி பாலமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்களிலும், சிறப்பு பூஜை நடந்தது.* கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள புனித தெரசா ஆலயத்தில், நள்ளிரவு 12:00 மணிக்கு பங்கு தந்தை லாரன்ஸ் தலைமையில், சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. அதில், அருட்தந்தைகள் விஜய் அமல்தாஸ், பால்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.அதே போல், கரூர் (சி.எஸ்.ஐ.,) நகர ெஹன்றி லிட்டில் நினைவாலயத்திலும், நேற்று காலை சிறப்பு திருப்பலி நடந்தது. மேலும், புத்தாண்டை பிறப்பையொட்டி, சிறப்பு பாடல்களும் பாடப்பட்டது. * கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு வகையான அபி ேஷகம் செய்யப்பட்டது. பின், சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* கருப்பத்துார், ஐயப்பனுக்கு சிறப்பு அபி ேஷகம் செய்து, மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது. * கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில், மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது. பின் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில், மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது.மேலும், வேலாயுதம்பாளையம் சேமங்கி மஹா மாரியம்மன் கோவில், நத்தமேடு அங்காளம்மன் கோவில், புகளூர் மேகமாலீஸ்வரர் கோவில்களில், சிறப்பு அபிேஷகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை