உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கழிப்பறையில் தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலி

கழிப்பறையில் தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலி

கரூர் :கரூர் அருகே, அட்டை கம்பெனி கழிப்பறையில் தவறி விழுந்த, வடமாநில ஊழியர் உயிரிழந்தார்.சட்டீஸ்கார் மாநிலம், ரயில் கார்க் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார், 38; இவர், கரூர் மாவட்டம், புகழூர் சடையம்பாளையம் பகுதியில் தங்கி, அட்டை கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த, 14ம் தேதி இரவு அட்டை கம்பெனியில் உள்ள, கழிப்பறைக்கு சென்றார். அப்போது, தவறி விழுந்த சந்திரகுமாருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சந்திரகுமார் உயிரிழந்தார்.வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை